டில்லி

நிதிநிலை அறிக்கையில் காஷ்மீர் பகுதிக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ததற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு மசோதாக்களை மாநிலங்களவை திருப்பி அனுப்பியது.   ஆனால் ஜம்மு காஷ்மீருக்கான ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீட்டுக்கு மக்களவை நேற்று ஒப்புதல் அளித்தது.

நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்படுவதற்கு முன் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக ஆளும் பாஜக வுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து 4 மணி நேரம் நடந்த விவாதத்தின்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘சிறப்பு அந்தஸ்து சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அங்கு நீதி, ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. அங்கு உள்ள மக்களுக்குப் பொருளாதார வளர்ச்சியும் சென்று அடைந்திருக்கிறது’’ என்றதால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேறவில்லை எனக் கூறப்படுகிறது.