ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வரும் பிப்ரவரி மாதம் முதல் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 ம் தேதி முதல் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி இந்த தகவலை வெளியிட்டார், கொரோனா காலத்தில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களின் சேவை என்ன என்பது குறித்து நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மற்றொரு டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இணை நோய்கள் உள்ள 60 வயதைக் கடந்தவர்களுக்கு மருத்துவரின் அறிவுரைப்படி அவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள பிரதமர் ஜனவரி 10 ம் தேதி முதல் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं, अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा।
2022 में, 3 जनवरी को, सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 25, 2021
இது தவிர 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு ஜனவரி 3 ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]