‘பத்மாவத்’ திரைபடத்துக்கு ஆன்லைன் மூலம் 50 லட்சம் டிக்கெட் விற்பனை

Must read

டில்லி:

புக் மை ஷோ என்ற ஆன்லைன் சினிமா டிக்கெட் புக்கிங் நிறுவனம் பத்மாவத் திரைப்படத்திற்கு தற்போது வரை 50 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியான ஜனவரி 26ம் தேதி முதல் இந்த ஆன்லைன் புக்கிங் மூலம் மட்டும் இவ்வளவு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2 வாரங்களை கடந்து பத்மாவத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முன்னதாக இந்த திரைப்படத்திற்கு ராஜ்புட் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக பல மாநிலங்களில் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து படம் வெளியானது. சில நகரங்களில் மட்டும் வெளியாகவில்லை

பல இடங்களில் வன்முறை வெடித்தது. இது போன்று எதிர்ப்புகளும், வன்முறைகள் இருந்தாலும் பத்மாவத் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு புக் மை ஷோ நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களே உதாரணமாக அமைந்துள்ளது.

More articles

Latest article