நேற்று கோவில்பட்டி பத்திரிகையாளர்களின் சந்திப்பில் “திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரத்தைத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த பொருள்களின் விலையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்துள்ளார்கள். திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகள் வெளிப்படையாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. அதே போல, ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறன என்பதைக் குறிப்பிட்ட சில திரையரங்குகளை சோதனை முயற்சியாகக் கண்காணித்து வருகிறோம்” என்று கூறினார் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு. . மேலும் “படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் இந்த செய்முறையை விரிவுபடுத்தப்பட்டு விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்போகிறோம் என கூறியுள்ளார்.

இனி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்கான, கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்” என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார் .