ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க என உக்ரைனில் உள்ள தமிழக மாணவர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலைநகர் கீவ்-ல் இருந்து அனைத்து இந்தியர்களும் ஏதாவது வாகனம் மற்றும் ரயில்கள் மூலம் உடனே வெளியே இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில், கார்க்கீவில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள், ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து போற வழியில பாம் வெடிச்சிருச்சி எங்களுக்கு உதவ யாரும் இல்லை என்றும், நாங்கள் வெளியேறுவதை உக்ரைன் ராணுவத்தினர் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏதாவது செய்து எங்களை காப்பாற்றுங்கள் என்றும் மாணவர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
உக்ரைனில் கார்கிவ் நகரில் கர்நாடகாவை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவன் நவீன் என்வர் சூப்பர் மார்க்கெட் முன் ரஷ்ய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது நண்பர் ராபின் கூறுகையில், “நவீன் வெளியே சென்று மற்ற மாணவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்க உதவுவார். அவரது மரணம், எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிலையில், தமிழக மாணவர், எங்களை காப்பாற்றுங்கள் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோ: நன்றி சன் நியூஸ்
உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் நவீன் பலி : இந்திய வெளியுறவுத் துறை
தலைநகர் கிவ்-ஐ விட்டு வெளியேறுங்கள்! உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர வேண்டுகோள்….