மும்பை

மும்பையில்  மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மரணம் அடைந்துள்ளார்.

இந்தி திரையுலகின் இணையற்ற கதாநாயக நடிகர்களில் திலிப்குமாரும் ஒருவர் ஆவார்.

அவருடைய நடிப்பை உலகில் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

அவர் தன்னுடன் நடித்த நடிகை சைராபானு வை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சுமார் 98 வயதாகும் அவர் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு வந்தார்.

தற்போது மும்பையில் உள்ள பிடி இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜலீல் பார்க்கர் அறிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]