புதுடெல்லி:
கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று தாக்கி வருவதால், இது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது இந்த புதிய வகை வைரஸ் காரணமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சை தொற்றும் வேகமாக பரவுகிறது என எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பலரும் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.