மே 26 விவசாயிகள்  போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு

Must read

டில்லி

வேளாண் சட்டங்களை எதிர்க்கும்  விவசாயிகள் போராட்டத்தில் மே 26 நடக்கும் கண்டன போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லி எல்லையில் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகும் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வரவில்லை.   அதே வேளையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை திரும்ப பெறாமல் உள்ளனர்.

வரும் மே மாதம் 26 ஆம் தேதி உடன் இந்த போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் முடிவடைகின்றது.  எனவே விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பு 26 ஆம் தேதி அன்று நாடெங்கும் ப்ரு நாள் கண்டன போராட்டம் நடத்த உள்ளன.   இந்த போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது குறித்து அந்த கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

“சம்யுக்தா கிசான் மோர்சா தங்கள் அமைதி[ போராட்டம் தொடங்கி 6 மாதம் முடிவடைவதால் மே26 அன்று அழைப்பு விடுத்துள்ள கண்டனப் போராட்டத்துக்கு நாங்கள் அதர்க்லு ஆதரவு தெரிவிக்கிறோம்..

கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று நாங்கள் பிரதமர் மோடிக்கு இணைந்து எழுதிய கடிதத்தில், “இந்த கொரோனா பரவல் நேரத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்  பெற்று விவசாயிகள் தங்கள் பயிர்த்தொழிலை தொடங்கி உணவளித்து பலர் உயிரைக் காக்க வகை செய்ய வேண்டும்.

உடனடியாக வேளான் சட்டங்களைத் திரும்பப் பெறுவதுடன் குறைந்த பட்ட ஆதார விலையை அரசு சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைப்படி நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

மத்திய அரசு தனது பிடிவாதத்தை நிறுத்தி விட்டு உடனடியாக விவசாய அமைப்புடன் இது குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சோனியா காந்தி, (காங்கிரஸ்), தேவே கவுடா (மஜத), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), மம்தா பானர்ஜி (திருணாமுல்), உத்தவ் தாக்கரே (சிவசேனா), மு க ஸ்டாலின் (திமுக), ஹேமந்த் சோரன் (ஜாமுமோ), ஃபரூக் அகமது (ஜேகேபிஏ), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), தேஜஸ்வி யாதவ், (ராஜத), ராஜா (கம்யூனிஸ்ட்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர்.

 

More articles

Latest article