கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற 30 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் மத்தியில்  உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் 30 இடங்களில் 26 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். அதேபோல அசாமில் 47 இடங்களில் 37க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக வெல்லும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் கிடைத்துள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்குவங்கத்தில் எந்தவொரு வன்முறை சம்பவமும் இல்லாமல் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த பெண்களுக்கு நன்றி கூறுகிறேன். மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று பேசினார்.