சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருஇடத்தில் கூட ஜெயிக்காது என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தொகுதிகள் ஒதுக்கீடும் முடிவடைந்துள்ளன. இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சாமி, தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றவர், பின்னர் 2 அல்லது 3 இடங்களில் வெல்லலாம் என்றும் சந்தேகத்திற்கிடமாகவே கூறினார்.
தேசிய கட்சியான பாஜக, மாநிலத்தில் தனித்து போட்டியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், வெற்றியோ, தோல்வியோ தனித்து களம் காண வேண்டும் என்றதுடன், கூட்டணி அமைத்து போட்டியிடுவது சரியல்ல என்று தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தார். சாமியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.