சென்னை:
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறுகிறது. நீட் தேர்வு விலக்கு குறித்த தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் விலக்கு பெற எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு முதலமைச்சர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவிக்கையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக நடைபெறவுள்ள சட்டமன்ற அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்றார்.