
மதுரை,
தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி புறவாசல் வழியாக நுழைய முயற்சி செய்து வருவதாக முன்னாள் நடிகையும், காங்கிரஸ் மகளிர் அணி தேசிய செயலாளராக இருப்பவருமான நக்மா குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை தனதுக்கு சாதகமாக பயன்படுத்தியும், அதிமுகவின் இரண்டு அணிகளையும் பயன்படுத்தி புறவாசல் வழியாக நுழைய பாஜக முயற்சிப்பதாக மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் நடிகை நக்மா கூறியுள்ளார்.
மதுரை வந்திருந்த நடிகை நக்மா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக விவசாயிகள் பற்றி தமிழக அரசும், தமிழக அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளாததால், அவர்கள் இங்கு போராட முடியாமல் டில்லிக்கு சென்று போராடி வருகிறார்கள்.
ஆனால்ர, அவர்களை அங்கேயும் போராட விடாமல் மத்திய அரசு விரட்டியடிக்கிறது. இது அநியாயம் என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அதிமுகவின் இரண்டு அணிகளையும் பயன்படுத்தி பாரதியஜனதா புறவாசல் வழியாக நுழைய முயற்சித்து வருகிறது என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]