நியூஸ்பாண்ட்:
டந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மிகக் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் என்று பல லட்சம் பேரை கணக்கு காட்டினாலும், அந்த அளவுக்குக் கூட வாக்குகள் வரவில்லை. தமிழிசை, ஹெச்.ராஜா போன்ற முக்கிய தலைவர்கள்கூட டெபாசிட் வாங்கவில்லை.
இதையடுத்து, மாநில தலைவர் தமிழிசையை மாற்றவேண்டும் என்ற குரல் அக் கட்சியில் எழுந்திருக்கிறது.
இது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்ட
“மத்தியில் நாங்கள்தான் ஆட்சியில் இருக்கிறோம். ஆனால், கடந்த தமிழக சசட்டசபை தேர்தலில் தனித்துவிடப்பட்டோம். வருந்தி வருந்தி அழைத்தும் எந்த பெரிய கட்சியும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை.
இதற்குக் காரணம் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்தான்.
குறைந்தபட்சம் தே.மு.தி.கவுடன் கூட்டணி வைத்திருந்தால், அப்போதும் தோல்விதான் கிடைத்திருக்கும் என்றாலும் கவுரவமான ஓட்டு வாங்கி டெபாசிட் இழந்திருக்கலாம். (!)
download (8)
இப்போது, மிக மோசமான தோல்வி அடைந்திருக்கிறோம். விஜயகாந்திடமும், அவரது மனைவி பிரேமலதாவிடமும் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தமிழிசையால் கூட்டணியை அமைக்க முடியவில்லை.
அது மட்டுமல்ல..  தோற்போம் என்று தெரிந்தும்கூட போட்டியிட முன்வந்தார்கள் பல பாஜகவினர். அவர்களில் பலரை புறக்கணித்துவிட்டு, தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுத்தார் தமிழிசை. அவர்களில் பலர் எதிர்க்கட்சிகளிடம் விலை போய்விட்டார்கள். இருவர் வெளிப்படையாகவே விலகினார்கள்.
தேர்தல் தோல்விக்கு பண பட்டுவாடா, திராவிட கட்சிகளின் ஆதிக்கம் குறித்தெல்லாம் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மாநில தலைமையின் செயல்பாடு சரியில்லாததே முக்கிய காரணம்.
தேர்தல் முடிவுகள் வெளியாதும், கட்சியின் இரு முக்கிய நிர்வாகிகள், டில்லி சென்று, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை, தனித்தனியே சந்தித்துள்ளனர். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் செயல்பாடுகளை விமர்சித்து, பல புகார்களை தெரிவித்துள்ளார்கள்.
பா.ஜ., தலைவராக புதியவர் ஒருவரை நியமிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆகவே விரைவில் தமிழிசை மாற்றப்படுவார்” என்ற பேச்சு பாஜக வட்டாரத்தில் உலவுகிறது.