போபால்: பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியபிரதேசம், குஜராத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவமாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற இருந்து சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.  ஏற்கனவே கட டந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மே மாதம் 4-ந் தேதி நடைபெற இருந்த 12-ம் வகுப்பு தேர்வுகளை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்தது. தற்போது அவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மாநில அரசுகளும் பிளஸ்2 தேர்வுகள் தொடர்பாக முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. தமிழகஅரசு, பொதுமக்களிடம் கருத்து கேட்டபிறகு முடிவு அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.
ஆனால் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான குஜராத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று காலை அறிவித்து உள்ளார்.
குஜராத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பிளஸ் 2 பொதுத்தேர்வு ஜூலை 1 முதல் 16 வரை இரண்டு பகுதிகளாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால்,  சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து,   குஜராத்தில் பிளஸ் 2 மாநில பொது தேர்வு ரத்து செய்வதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.