கொல்கத்தா

பாஜக ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கும் மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மேற்கு வங்கத்தை ஆளும் திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது சிபிஐ பல வழக்குகள் தொடர்ந்துள்ளது.

இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மம்தா, “மாநிலங்களின் விவகாரங்களில் மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புக்களைப் பயன்படுத்தி தலையீடு செய்கிறது.   இது மிகவும் தவறான செய்கையாகும்.

பாஜக ஆட்சி ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின், முசோலினி ஆட்சியை விட மோசமானதாக உள்ளது.  மத்திய அரசு விசாரணை அமைப்புக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும்.  அப்போது தான் விசாரணை முகமைகள் அரசியல்  தலையீடு இன்றி செயல்பட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.