உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்: முன்னாள் எம்பி ரஷித்

Must read

புதுடெல்லி:
த்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின் பேரில், தோல்வியடைந்த ஐந்து மாநில தலைவர்களை ராஜினாமா செய்தனர். இதில் உத்தரபிரதேச மாநில தலைவர் காலியாக உள்ளது.

உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் எம்பி ரஷித், பிரமோத் திவாரி, ராஜேஷ் மிஸ்ரா உள்ளிட்டோருடன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஷித், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

More articles

Latest article