சென்னை,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதரணி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, அதிமுக அம்மா அணியை சந்தித்து பேசினார் பெசன்ட் நகர் வீட்டில் தினகரனை சந்தித்து பேசினார்.
அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, டிடிவி தினகரன் புதிய நிர்வாகி களை அறிவித்துள்ள நிலையில், அதற்கு அந்த அணியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், காங்கிரசை சேர்ந்த விஜயதரணி எம்எல்ஏ டிடிவியை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
டிடிவியின் மாமியார் சந்தானலட்சுமியின் மறைவு குறித்து துக்கம் விசாரிக்க சென்றதாகவும், அதிமுகவை நசுக்கி வேடிக்கை பார்க்கிறது பாரதியஜனதா என்றார். அதிமுகவின் செயல்பாட்டை பாஜகவே தீர்மானித்து, நடை முறைபடுத்தி வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட பாஜகவுக்கு தகுதியே இல்லை.
நாளை திமுகவையும் பாஜக, இதேபோல் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிப்பதற்கு பாஜக திட்டம் தீட்டி கொண்டு, அதை செயல்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கு யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.
பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தமிழகத்தில் மத பிரவேசத்தை பாஜக துவங்க நினைக்கிறது. அதற்கு, எக்காரணம் கொண்டும் இடம் தரக்கூடாது.
பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விட கூடாது. பாஜக, அதிமுகவில் அதிமுக்கமும், அழுத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறது.
பாஜகவின் துன்புறுத்தலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பாஜகவின் பல்வேறு செயல்களை கண்டு கொண்டு இருக்கிறோம். இதில், நானும் சிக்குவேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை பற்றி நான் கவலையும் படவில்லை.
பாஜகவை பற்றி விமர்சிப்பவர்களுக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதை நான் அறிவேன்.
இப்போது நான் கொடுக்கும் பேட்டியை வைத்து, எனக்கு அவர்கள் தொல்லை கொடுக்கலாம். அதை பற்றி நான் கவலைப்பட்டால், இங்கு உங்களிடம் நின்று பேச மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.