ஷாஜபூர், மத்தியப் பிரதேசம்

நேற்று நடந்த வன்கொடுமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் மத்தியப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒரு தாயும் குழந்தையும் இருக்கும் போதே கடையை அடைத்தது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

வன்கொடுமை சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தி அமைத்தது.   பல இடங்களில் இந்த வன்கொடுமை சட்டம் பழி வாங்க மட்டுமே பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சில திருத்தங்களை உச்சநீதிமன்றம் அமைத்தது.    இதனால் அந்தச் சட்டம் நீர்த்துப் போய் விட்டதாகவும் தலித்துகள் உரிமை பறிக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை எதிர்த்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உட்பட பலர் உச்சநீதிமன்றத்துக்கு மறு சீராய்வு மனு அளித்துள்ளனர்.   நேற்று உச்சநீதிமன்றத்தின் சட்ட திருத்தத்தை எதிர்த்து வட இந்தியாவில்  மாபெரும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.     இந்தப் போராட்டத்தில் 10  பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று மத்தியப் பிரதேச மாநிலம ஷாஜபூர் மாவட்டத்தில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கோபால் பர்மார் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.  அவர் திறந்திருந்த கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி பல கடைகளை அவரே மூடினார்.   அவ்வாறு மூடும் போது ஒரு கடையின் உள்ளே ஒரு பெண் தனது குழந்தையுடன் உள்ளே இருந்துள்ளார்.   அதை கவனிக்காமல் அந்தக் கடையை கோபால் பர்மார் மூடி உள்ளார்.

அதைக் கண்ட அந்தப் பெண்ணின் கணவர் ஓடோடி வந்து கடையை திறந்துள்ளார்.  அதனால் ஆத்திரம் அடைந்த கோபால் பர்மார் தனது ஆதரவாளர்களுடன் திரும்பி வந்து தகராறு செய்துள்ளார்.   அதன் பிறகு அங்கு வந்த காவல்துறையினர் இருவரையும் சமாதானப் படுத்தி அந்த பெண்ணையும் அவர் குழந்தையையும் வெளியேற்றிய பின் கடையை அடைத்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் கணவர் சட்டமன்ற உறுப்பினரின் மனிதாபமானமற்ற இந்த செயலை கண்டித்துள்ளார்.  அதற்கு கோபால் பர்மார் அந்த நபரின் கன்னத்தை பிடித்து தள்ளி உள்ளார்.   இவை அனைத்தும் வீடியோ பதிவாக்கப்ப்பட்டு சமூக வலை தளங்களில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

இந்த நிகழ்வு பற்றி சட்டப்பேரவை உறுப்பினர் கோபால் பர்மார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

[youtube https://www.youtube.com/watch?v=egVRuFtAsxM]