காற்றில் இருந்து மின்சாரம் எடுப்பது போல், அதில் உள்ள தண்ணீரைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கான ஆய்வுகள் குறித்த பேச்சுகள் உள்ள நிலையில், “மழையை செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்” என்ற பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தன்சிங் ராவத்

உத்தரகண்ட் மாநில உயர்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் தன்சிங் ராவத், அம்மாநிலத்தில் ஏற்படும் மழை, வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவுகளை கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அப்போது “ஒரு இடத்தில் பெய்ய இருக்கும் மழையின் அளவு மற்றும் பாதிப்பை முன் கூட்டியே அறிவிக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய செயலியை உருவாக்கி வருவதாகவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.

மேலும், “இந்த செயலி மூலம் ஒரு இடத்தில் பெய்ய இருக்கும் மழையின் அளவை தெரிந்து கொண்டு அதை குறைக்கவோ கூட்டவோ மாற்றியமைக்கக் கூடிய வகையில் இந்த செயலி இருக்கும்” என்று கூறினார்.

இவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதோடு, “இவர்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு பயிற்சி பெறுகிறார்கள்” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், “தன்சிங்-கின் இந்த கண்டுபிடிப்புக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று கிண்டலடித்திருக்கிறார்.

https://twitter.com/suryapsingh_IAS/status/1432389938482319366

உயர் கல்வித் துறை அமைச்சர் தன்சிங் ராவத்தின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் விமர்சித்துள்ளனர்.