உதய்பூர்

ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பாப்லால் கார்டி மக்கள் நிறையக் குழந்தைகள் பெற வேண்டும் என உரையாற்றி உள்ளார். 

பாஜக ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சராக  பாபுலால் கார்டி பதவி வகித்து வருகிறார். அவர் நேற்று உதய்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பாபுலால் கார்டி தனது உரையில்,

”மக்கள் யாரும்  பசியுடனும், வீடு இல்லாமலும் உறங்கக்கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும்.  மக்கள் நிறையப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார்”  

என்று கூறி உள்ளார்.

பாபுலா கார்டி உதய்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்  பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]