குருசேத்திரம்

ஸ்திரேலியா செல்வோருக்கு பத்திரிகையாளர் என்னும் பெயரில் போலி விசா வாங்கிக் கொடுத்த விவகாரத்தில்  பாஜக மாநில பெண் அமைப்பாளர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருசேத்திரம் நகரில் 13ஆவது செக்டரில் வசிப்பவர் ராகேஷ் சர்மா.   இவர் பாஜக தலைவரும் மாநில அமைப்பாளருமான சகுந்தலா சர்மாவின் மகன் ஆவார்.   இவர்  ஒரு இந்திச் செய்தித்தாளில் ஆஸ்திரேலிய செய்தியாளராக பதிவி வகிப்பதாக கூறப்படுகிறது.   இவர் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம்.   அவ்வாறு தற்போது அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ள போது பிரிஸ்பேன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ராகேஷ் சர்மாவை பிரிஸ்பேன் நகர நீதிமன்றத்தில் காவல்துரையினர் ஆஜர் படுத்தினர்.   அவரை கைது செய்த ஆஸ்திரேலிய எல்லைக் காவல் துறை, “ராகேஷ் சர்மா பல ஆண்டுகளாக போலி விசாவின் மூலம் பல நாடுகளுக்கு மக்களை அனுப்பி உள்ளார்.

தற்போது சுமார் 20 வயதிலிருந்து 37 வயது வரையிலான 8 பேரை தற்காலிக விசா மூலம் அழைத்து வந்துள்ளார்.   அந்த விசாவின் மூலம் அவர்களை ஊடக பிரதிநிதிகள் என தங்கவைக்க முயன்றுள்ளார்.     அதற்காக அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார்.   அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்குக்காக இந்தி மொழி பெயர்ப்பாளரை பணியில் அமர்த்துமாறு கூறி நீதிபதி வழக்கை ஏப்ரல்; ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.   அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஐந்து வருடங்களில் இருந்து 20 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.” என தெரிவித்துள்ளது.

குருசேத்திரத்தில் வசித்து வரும் ராகேஷ் சரிமாவின் மனைவி பிரியங்கா சர்மா, “ஆஸ்டிரேலியாவில் என்ன நடந்தது என எனக்கு தெரியாது.   எனது மைத்துனர் மூலம் அவருக்கு ஏதோ அங்கு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்தேன்.

அவர் கடந்த 27ஆம் தேதி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.  அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் எல்லை.    மேலும் அவரை நான் வாட்ஸ்அப் தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.  அதற்கும் எந்த பதிலும் வரவில்லை.  அவருடன் சென்றவர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

நான் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் தொடர்பு கொண்டு அவரை இந்தியா அழைத்து வர முயல்வேன்.  அவ அடிக்கடி வெளிநாடு செல்வார்.  ஆனால் அவர் எங்கு என்ன செய்கிறார் என்பது எனக்கு தெரியாது”  என தெரிவித்துள்ளார்.