ஆந்திரா:
ந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆலோசகர் அஜய் கல்லம் ஐஏஎஸ்க்கு எதிராக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளை விரைவில் எடுக்க கோரியுள்ளார் அஸ்வினி உபாத்தியாயா.

இந்த மாதத் துவக்கத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு எதிராக பகிரங்கமாக குற்றச்சாட்டுகள் வைத்ததால், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீதும், அவரது ஆலோசகர் மீதும் பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்தியாயா வழக்கு தொடுத்துள்ளார்.

பல எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க கோரி பொது நலன் வழக்கு தொடுத்திருப்பவர் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா.

இவர் தற்போது ஆந்திர முதலமைச்சர் மற்றும் அவரது ஆலோசகர் மீதும் வழக்கு தொடுத்துள்ளார், இந்த வழக்கில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்யோசனை இல்லாத நடவடிக்கை நீதிபதி ரமணாவின் பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது, இது மிகவும் தவறான ஒரு செயல். ஆந்திர முதலமைச்சர் இவ்வாறு முன்யோசனை இல்லாமல் செய்தது தவறு. ஆகவே இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் பல ஊழல் வழக்குகளும், கணக்கில் வராத சொத்து குவிப்பு வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும் உள்ளன, முதலமைச்சர் மீதும் பலர் முன் யோசனை இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர், அதேபோல் முதலமைச்சரும் இருப்பது தவறு என்று அஸ்வினி உபாத்தியாயா தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 6-ஆம் தேதி முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அடுத்தகட்ட நீதிபதியாக இருக்கும் என்வி ரமணாவின் பேரில் பல குற்றச்சாட்டுகளை வைத்து தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார், இந்த கடிதத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசகரான அஜய் கல்லம் ஐஏஎஸ் அக்டோபர் 10 ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.