சென்னை:
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு. மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட உள்ளதாக தகவல் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளதாக தகவல். அண்ணாமலைக்கு 2 PSO உள்பட 11 பேர் கொண்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு வழங்குவர்.
இவர் எங்கு சென்றாலும் உடன் பாதுகாப்பிற்கு செல்லும் வகையில் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் செல்வர். அவர்களில் ஒருவர் பாதுகாவலர் சீருடையிலும், மற்றொரு சாதாரண உடையிலும் இருப்பார். அண்ணாமலை எங்கு சென்றாலும் மேற்குறிப்பிட்ட ஒய் பிரிவு பாதுகாப்பை மாவட்ட போலீசார் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel