சென்னை:
பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை காக்க ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒற்றுமையே வலிமை என்பதை உணர்ந்து பாஜக அல்லாத கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்பை காங்கிரஸ் கட்சி கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தான் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக மீது தனிபட்ட வெறுப்பு இல்லை என்றும், பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒன்று திரட்டி பாஜகவை ஓரங்கட்டிவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.