சென்னை:
க்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் 15ஆவது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 சதவிகிதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150 சதவிகிதம் உயர்த்தப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு என்றும், இது ட்ரெய்லர் தான்; இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.