சீர்காழி: தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிக்கிறது என மயிலாடுதுறை சம்பவம் குறித்து விசிக தலைவர்  திருமாவளவன் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம்மீது கருப்புக்கொடிகள் வீசப்பட்ட நிகழ்வு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை யில் விரிவான விளக்கம் அளித்தார். அதுபோல, நேற்றைய நிகழ்வு குறித்த திருமாவளவனும், ஆளுநர் வாகனம் மீதான தாக்குதலுக்கு கணடனம் தெரிவித்திருந்தார். ஆனால், இன்று தனது கருத்தை மாற்றி பேசியுள்ளார்.

இன்று சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழகஅரசு  அனைத்து தரப்பினராலும் பாராட்டப் படக்கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது. அந்த  அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக திட்டம் தீட்டி வருகிறது. தமிழ்நாட்டில், பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் திட்டமிட்டு  வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றன. அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு முயல்கிறது. அந்த அடிப்படையில்தான் எச்.ராஜாவை கேரள கவர்னராக நியமிக்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.