புதுடெல்லி: ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க, பாரதீய ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் டெல்லி மாநில துணை முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான மணிஷ் சிசோடியா.

ஆனால், இந்தக் குற்றசாட்டு குப்பையானது என்றும், வெறும் கவனத்தைக் கவருவதற்காக கூறப்படுகிறது என்றும் பாரதீய ஜனதா தரப்பில் கூறுகின்றனர்.

மணிஷ் சிசோடியா கூறியுள்ளதாவது, “ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு தலா ரூ.10 கோடி என்ற விலையில், மொத்தம் 7 ஆம் ஆத்மி உறுப்பினர்களிடம் விலை பேசியுள்ளது பாரதீய ஜனதா.

கடந்த காலங்களிலேயே இத்தகைய முயற்சியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா, கசப்பான அனுபவத்தையே சந்தித்தது. ஆனால், தற்போது தன் சார்பாக ‍மேற்கோள் காட்டுவதற்கு எந்த உருப்படியான விஷயமும் இல்லாததால், இந்த குதிரைபேர விவகாரத்தில் இறங்கியுள்ளது அக்கட்சி.

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடன் தொடர்பில் இருப்பதாக சமீபத்தில் நரேந்திர மோடி பேசியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.