டில்லி:

பாஜக வருவாய் 81.8 சதவீதம் அதாவது ரூ. 1,034 கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் வருவாய் 14 சதவீதம் அதாவது ரூ.225.36 கோடியாக குறைந்துள்ளது.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சில தேசியவாத காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய 7 தேசிய கட்சிகளின் மொத்த வருவாய் ரூ. 1,559.17 கோடி என்றும், செலவு ரூ.1,228.26 கோடி என்றும் ஜனநாயக சீரமைப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது வருவாய் மற்றும் செலவினங்களை தெரிவித்துள்ளது.

2015-16ம் மற்றும் 2016-17ம் ஆண்டுகளுக்கு இடையில் பாஜக வருவாய் ரூ.570.86 கோடியில் இருந்து 81.18 சதவீதம் அதாவது 463.41 கோடி அதிகரித்து ரூ. 1,034.27 கோடியாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வருவாய் ரூ.261.56 கோடியில் இருந்து 14 சதவீதம் குறைத்து ரூ.225.36 கோடி என்ற நிலையில் உள்ளது.

2016-17ம் ஆண்டில் பாஜக ரூ.710.057 கோடியை செலவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது வருவாயை விட ரூ.96.30 கோடி கூடுதலாக ரூ.321.66 கோடியை செலவு செய்துள்ளது. இதில் நன்கொடை மூலம் பாஜக.வுக்கு ரூ.997.12 கோடி கிடைத்துள்ளது. கூப்பன் விநியோகம் மூலம் ரூ.115.644 கோடி வருவாய் ஈட்டியது தான் காங்கிரஸ் கட்சியின் அதிப்டியான வருவாயாக உள்ளது. வங்கி வட்டி மூலம் இக்கட்சிகளுக்கு ரூ.128.60 கோடி கிடைத்துள்ளது.