சென்னை
பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா பார்முலா 4 கார் ரேசை வெற்றிகரமாக நடத்திய உதயநிதி ஸ்டாலினை பாராட்டி உள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை தீவுத்திடலில் தொடக்கிய பார்முலா 4 கார் பந்தயம் நேற்றி நிறைவடைந்துள்ளது. பார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பாஜக நிர்வாகியும், பைக் ரேஸருமான அலிஷா அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அலிஷா அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில்,
“சென்னையில் இப்போது பார்முலா 4 கார் பந்தயம் முக்கியமா என நிறைய பேர் கேட்கின்றனர். ஒரு வீராங்கனையாக பார்த்தால் இது முக்கியம்தான். தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நினைத்து பெருமைப் படுகிறேன்.
அவர் நன்றாக உதவி செய்கிறார் என்பதை மறுக்க முடியாது. சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தயம் வைப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து அவர் இதைச் செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்”
என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]