சென்னை:
ட மாநில கூலித் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் பீகார் பாஜக தொடர்ந்து அவதூறு பரப்புவது பாஜக இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது.

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் வரும் 10ஆம் தேதி 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது

உலக சிறுநீரக தினம் மார்ச் 9 ஆம் தேதி அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில் இது குறித்து விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும் விதமாக தனியார் மருத்துவமனை சார்பாக சிறுநீரக உடல்நல விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது.5கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டனர்

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது நல்லது, தொடர்ந்து வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் 800, சென்னையில் 200 இடங்கள் என மொத்த. 1000இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் ஒன்றிய அரசு ஊருக்கு மாற்று அறுவை சிகிச்சையை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கடந்த 28 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் முறுக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக சிறப்பு பிரிவை ஏற்படுத்தினார்.. அதிலிருந்து தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஒருங்கிணைப்பை கொண்டு வந்தாலும் அதிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார்.