டில்லி

ரே வருடத்தில் பாஜகவுக்கு கிடைத்த நன்கொடைகள் 593% உயர்ந்து ரூ.532 கோடி ஆகி உள்ளது.

அரசியல் கட்சிகள் நிதி குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கிழ் வினா எழுப்ப முடியாது என தேர்தலாணையம் அறிவித்துள்ளது.  ஆயினும் ஒவ்வொரு கட்சியும் வருமான வரி கணக்கு அளிக்கும் போது அந்தக் கட்சிகள் ஒவ்வொரு வருடமும் பெற்றுள்ள நிதி எவ்வளவு என தெரிந்து விடுகிறது.  அத்துடன் கட்சிகளின் வருமானம் குறித்த தகவல்களை இந்த சட்டத்தின் கிழ் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சிகளீல் ரூ.20000 க்கு மேல் நன்கொடை பெறும் கட்சிகளில் பாஜக முதல் இடத்தில் உள்ளது.  கடந்த 2015-16 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு நன்கொடையாக ரூ.76.85 கோடி கிடைத்துள்ளது.   ஆனால் 2016-17 ஆம் ஆண்டில் அந்த நன்கொடை ரூ.532.27 கோடியாக உயர்ந்துள்ளது.   அதாவது பாஜகவுக்கு ஒரே வருடத்தில் நன்கொடை 593% உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.   ஆனால் நன்கொடை அதிகரிப்பில் காங்கிரஸ் பாஜகவை பின்னுக்கு தள்ளி உள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக கடந்த 2015-16 ஆம் வருடம் ரு.71 லட்சம் மட்டுமே கிடைத்திருந்தது.  ஆனால் 2016-17 ஆம் வருடம் இந்த நன்கொடை ரூ.6.34 கோடியாக உயர்ந்துள்ளது.   அதாவது காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை 793% உயர்ந்துள்ளது.

இதே போல மாநிலக் கட்சிகளான பகுஜன் சமாஜ்,  தேசியவாத காங்கிரஸ், திருணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் சென்ர வருடம் நன்கொடை சதவிகிதம் அதிகரித்துள்ளது.    ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் 9% நன்கொடை குறைந்துள்ளது.   கடந்த 2015-16ஆம் வருடம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.1.58 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.   ஆனால் 2016-17 ஆம் வருடம் ரூ.1.44 கோடியாக  குறைந்துள்ளது.