டோதரா

பா ஜ க கவுன்சிலர் ஒருவரை அவர் வார்டு மக்களில் சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

வடோதரா நகராட்சியில் வார்டு எண் 5ன் கவுன்சிலர் பா ஜ க வை சேர்ந்த ஹஸ்முக் படேல்.  இவரது தொகுதியில் உள்ள ஏரி மற்றும் நீர்நிலைகளில் பலர் சட்ட விரோதமாக குடிசை அமைத்து வசித்து வந்தனர்.  நகராட்சி அவர்களை அங்கிருந்து அகற்றி 2 கிமீ தொலைவில் குடியிருப்புக்களைக் கட்டி குடியேற்றியது.  அங்கு அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் சிறு மழை பெய்தாலும் வீடுகள் ஒழுகுவதாகவும் சொல்லப்படுகிறது.

கவுன்சிலர் படேல் தினமும் தனது வார்டை சுற்றி வருவது வழக்கம்.  அப்படி வரும் போது அந்த ஏரிக்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிலர் அதே இடத்தில் மீண்டும் குடிசை அமைத்துக் கொண்டிருந்தனர்.  அதை படேல் தடுத்துள்ளார்.  அதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை ஒரு மரத்தில் கட்டி அடித்துள்ளனர்.  படேலின் கார் ஓட்டுனர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரை கட்டி வைத்து அடிக்கவில்லை என அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.  அயினும் அவரை மரத்திலிருந்து போலீசார் அவிழ்த்துக் கொண்டு செல்வது வீடியோ படமாக்கப்பட்டு மீடியாவில் பதியப்பட்டுள்ளது.  அது இப்போது வைரலாக பரவி வருகிறது. போலீசார் 34 பெண்கள் உட்பட மொத்தம் 64 பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கு வடோதரா நகராட்சி கமிஷனர் வினோத் ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் அந்த வீடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதாகவும் எந்த ஒரு புகாரும் இதுவரை மக்கள் நகராட்சிக்கு அளிக்கவில்லை எனவும் கூறி உள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=dl1cXfc7W1Y]