திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மத கலவரத்தை தூண்டிவிடும் வகையில் கோவில் இடத்தில் இறைச்சி கழிவை கொட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதியில் மட்டுமே பாஜ வெற்றி பெற்று எம்எல்ஏ.வாக ராஜகோபால் உள்ளார்.

இரவு, பகல் நேரங்களில் இறைச்சி மற்றும் உணவு கழிவுகளை கடந்த ஒரு மாத காலமாக மர்ம ஆசாமிகள் கோவில்களின் முன்பு கொட்டிவிட்டுச் சென்று வந்தனர். இதன் பின்னால் முஸ்லிம்கள் இருப்பதாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.

நேமன் சிவன் கோவில், வெள்ளயனி மற்றும் மேரிலாண்ட் ஸ்டுடியோவில் உள்ள செருபாலமண்டம் சிவன் கோவில் இடங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. கோவில் முன்பு கோழி இறைச்சி கழிவுகளை இந்துக்கள் அல்லாதவர்கள் கொட்டுவதாக பிரசாரம் செய்யப்பட்டது.

இந்த கழிவுகள் கேரளா கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் கொண்டு வந்து கொட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பாஜ தலைவர் கிரிஷூக்கு சொந்தமானது. இந்நிலையில் கிரிஷின் மகனை நேற்று அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இ ந்த செயலில் ஈடுபட்ட வாகனமும், மர்ம ஆசாமிகளையும் அடையாளம் காண முடியாததால் விசாரணை ம ந்தமாக உள்ளது. இறுதியாக அப்பகுதி குடியிருப்பு வாசிகளும், சிபிஎம் கட்சியினரும் அந்த ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த புகாரின் சமாதானம் ஏற்படுத்த பாஜ மாவட்ட தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான கோபன் காவல்நிலையம் வந்து பாஜ தலைவர் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பாஜக.வினர் கழிவுகளை சேகரித்து மத மோதலை உருவாக்க முயற்சிப்பதாக சிபிஎம் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.