சென்னை: பாஜகவினருக்கு மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிர், மூன்று பட்டம் வாங்கிவிட்டால்  பெரிய ஆளா, வாயடக்கம் தேவை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை தெர்மோகோல் புகழ் அதிமுக முனனாள் அமைச்சர்  செல்லூர் ராஜு கடுமையாக சாடினார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள், பாஜகவினர் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய செல்லூர் ராஜி,  அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா?  என கேள்வி எழுப்பியவர்,  பாஜகவினரிடம் சகிப்புத்தன்மை இல்லை என்று காட்டமாக கூறியதுடன், அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை. ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது. பாஜகவினருக்கு இதனை ஏற்க ஜீரன சக்தி இல்லை என்று கூற்னார்.

மேலும், பாஜகவை கடுமையாக விமர்சித்தவர்,   ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாகாது. அதுபோல, எவனாலும் ஜெயலலிதாபோல ஆக முடியாது. சிலர் மூன்று பட்டம் வாங்கிவிட்டால் தன்னை பெரிய ஆள் என நினைத்துக்கொள்கிறார்கள் என அண்ணாமலையை மறைமுகமாக சாடியவர்,  மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்கின்றனர் என்றும் கூறினார்.