சென்னை:
பாஜக இளைஞரணி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 26 வயதான இவர், பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக சொல்லி, அவரை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது. பிறகு ஒருகட்டத்தில் அந்த சிறுமியிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம்.. இதனால், கலங்கி போன அந்த சிறுமி, வினோத்திடம் இதை பற்றி கேட்டதற்கு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் வினோத்.. இதையடுத்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் திருவரங்கரம் போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். இதையடுத்து திருவரங்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து உள்ளனர்.. பிளஸ் 2 படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியிருக்கிறார் வினோத்.. அவரை காதலிப்பதாகவும் சொல்லி, கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதி கூறியுள்ளதாக தெரிகிறது. இப்போது, அச்சிறுமியை ஏமாற்றிய நிலையில், சம்பந்தப்பட்ட நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளது, மீண்டும் அதிர்வலையை கட்சிக்குள் உண்டு பண்ணி வருகிறது.