டில்லி

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறாத நாட்களில் ஊதியத்தை விட்டுத் தர வேண்டும் என்னும் அமைச்சர் அறிவிப்புக்கு சிவசேனாவை தொடர்ந்து மேலும் பாஜக கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாராளுமன்றத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளிகளால் முடங்கிப் போனது தெரிந்ததே.   மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் கூட்டத் தொடர் நடைபெறாத நாட்களுக்கான ஊதியத்தை விட்டுத் தருவார்கள் என தெரிவித்தார்.   அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஏற்கனவே பாஜக வின் முக்கிய கூட்டணி கட்சியான சிவசேனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது தெரிந்ததே.  தங்களிடம் விவாதிக்காமல் இந்த அறிவிப்பு வந்ததால் தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஊதியத்தை விட்டுத் தர மாட்டார்கள் என சிவ சேனா கூறியது.

அதே கருத்தை பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் சமத காட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாகாவும் தெரிவித்துள்ளார்.   இவர் பாஜகவின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுப்ரமணியன் சாமி “நான் தினமும் மாநிலங்கள் அவைக்கு செல்கிறேன்.   அலுவல்கள் நடக்காததற்கு நான் பொறுப்பு இலை.   அதனால் நான் எனது ஊதியத்தை விட்டுத் தர முடியாது” என தெரிவித்துள்ளார்.