ந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அமராவதியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மோடி தெரிவித்து, சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்குதேசம், பாராளுமன்றத்தில் அமளி செய்து அவையை முடக்கி வருகிறது. மேலும், மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக டில்லியில் முகாமிட்டு, எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரிய சந்திர பாபு நாயுடு, இன்று அமராவதியில் உள்ள ஆந்திர தலைமை செயலகத்தை நோக்கி நடைபெற்ற  சைக்கிள் பேரணி யில் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டினார்.

முதலமைச்சரின் கார் மெதுவாக முன்னால் இயக்கப்பட்ட நிலையில் பாதுகாவலர்கள் சந்திரபாபு நாயுடுவின் சைக்கிளுக்குப் பின்னால் ஓடிவந்தனர்.

முதல்வரை பின்தொடர்ந்து ஏராளமான தெலுங்குதேச கட்சி தொண்டர்களும் சைக்கிளில் சென்றனர்.

தெலுங்குதேச கட்சியின் தேர்தல் சின்னமும் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது.