சென்னை: முன்னாள் திமுக பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சரும், பேராசிரியருமான மறைந்த அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையொட்டி, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொணட்டி வருகின்றனர். இன்று அவரது அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணா – கருணாநிதி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் பேராசிரியர் அன்பழகனின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் பொதுவாழ்க்கை, முன்னாள் முதல்வர் கலைஞர் உடன் 75 ஆண்டு கால பயணம் வரையிலான அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது
முதல்வருடன் துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.