பிறந்த மாதமும்.. தாக்கும் நோய்களும்!

Must read

பிறந்த மாதமும்.. தாக்கும் நோய்களும்! சரிதானான்னு செக் செஞ்சுக்குங்க!

 

கொலம்பியா பல்கலைக்கழத்தை சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி என்ற ஆராய்ச்சியாளர், புதுவித ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளார். அதாவது  ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்கள் எந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பதை கணிக்கலாம் என்கிறார் இவர். சரிதானான்னு செக்  பண்ணிப்பார்த்துக்குங்க..

 

ஜனவரி  மாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவார்கள்.

 

பிப்ரவரி  மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் தொடர்பான நோய்களால்.. குறிப்பாக.. ஒழுங்கற்ற இதய துடிப்பால்  சிரமப்படுவார்கள்.

 

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து இருப்பதால், மாரடைப்பு ஏற்படலாம்.

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு சீராக ரத்த ஓட்டம் செல்வது குறைந்து, கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்படக்கூடும்.

மே, ஜீன், ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவ்வப்போது சிறு சிறு உடல் கோளாறுகள் ஏற்படக்கூடும்.

 செப்டம்பர்    மாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பாதிக்கப்படுவார்கள்.

 

அக்டோபர்  மாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு  அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள்.

 

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் வைரஸ் நோய்த் தொற்றுகள் மூலம் பாதிக்கப்படுவார்கள்.

 

டிசம்பர்  மாதத்தில் பிறந்தவர்கள் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள்.

.

More articles

Latest article