லத்தூர்: மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவிய லாத்தூர் மாவட்டத்தில் 15,000 பறவைகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மகாராஷ்டிராவில் பார்பனி, பீட் உள்ளிட்ட மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், லாத்தூர் மாவட்டத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாத்தூர் ஆட்சியர் பிருத்விராஜ் கூறியதாவது: கேந்திருவாடியில் நேற்று வரை குறைந்தது 225 பறவைகள் இறந்துள்ளன. அதே நேரத்தில் சுக்னியில் 12 கோழிகளும், உத்கீர் தாலுகாவின் வஞ்சர்வாடியில் 4 கோழிகளும் இறந்துள்ளன.

இந்த பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் முடிவுகள் தொற்றுநோய்க்கு சாதகமாக வெளிவந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 1  கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.