இந்தியாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி : பில் கேட்ஸ் பாராட்டு

Must read

டில்லி

ந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்லார்.

கொரோனா எதிர்ப்பு பணி இந்தியாவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   இந்த சாதனையில் ஒரு புதிய மைல் கல்லாக இந்தியாவில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  இதையொட்டி இந்தியாவுக்குப் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உலக செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது டிவிட்டரில்,  தற்போது இந்தியா 1 பில்லியன் (100 கோடி) டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போட்டுள்ளது.  இது இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தித் திறன், கோவின் செயலி உதவிகள், லட்சக்கணக்கான சுகாதார ஊழியர்களின் முயற்சிகள் இவற்றுக்கான சான்றாக உள்ளது.  பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள் “ என பதிந்துள்ளார்.

இதற்கு மோடி, தனது பதிலாக, “இந்த 1 பில்லியன் தடுப்பூசி மைல் கல்லை எட்டிய இந்திய விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள், கண்டுபிடிப்பாளர் என அனைவரின் முயற்சிக்கான உங்கள் பாராட்டுக்கு நன்றி, பில்கேட்ஸ், இந்தியா இந்த தொற்று நோயை எதிர்த்துப் போராடும் உலக அளவிலான முயற்சிகளில் ஒரு உறுதியான பங்குதாரராக நீடிக்கிறது” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

More articles

Latest article