சென்னை : பைக், மொபைல் போனுடன் மாணவர்கள்  பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு  தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை ( ஜூன் 1ம் தேதி ) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரைகள் வழங்கி உள்ளது.
images
இந்த அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: 16 முதல் 18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத நிலையில், பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.  பள்ளிக்கு மாணவர்கள் மொபைல் போன்களை எடுத்துவர அனுமதிக்கக் கூடாது. மீறி எடுத்துவரும் மாணவரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து எச்சரிக்க வேண்டும்” – இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.