பாட்னா :

பீகார் மாநிலத்தில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள ஹில்சா தொகுதியில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் சக்தி சிங், கடைசி ரவுண்டுக்கு முந்தைய ரவுண்ட் வரை கூடுதல் ஓட்டுகள் பெற்றிருந்தார்.

ஆனால் கடைசி ரவுண்டில் 12 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் கிருஷ்ண முராரியிடம் தோல்வி அடைந்தார்.

அந்த மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (எம்.எல்) வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

மகபூப் ஆலம்

அங்குள்ள பால்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அந்த கட்சி வேட்பாளர் மகபூப் ஆலம், 53 ஆயிரத்து 597 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் எம்.எல். கட்சி, இந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. தலைமையிலான மெகா கூட்டணியில் அங்கம் வகித்துள்ளது.

இவருக்கு அடுத்த படியாக ஆமர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். வேட்பாளர் அக்ருள் இமான் 52 ஆயிரத்து 515 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.

இந்த கட்சி, பீகாரில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

– பா. பாரதி