பாட்னா,

னைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இலவச வைபை வசதி ஏற்பlடுத்தி கொடுத்து அசத்தி உள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்  மார்ச் 22ந்தேதி பீகார் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 105வது பீகார் தினம் கொண்டாடப்பபட்டது.

இந்தஆண்டு பீகார் தினத்துக்கு பிரதமர் மோடி, மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

நேற்று நடைபெற்ற  பீகார் தின விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது, தான் ஏற்கனவே அறிவித்தபடி, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் இலவச வைபை வசதியை தொடங்கி வைத்தார்.

நிதிஷ்குமார், கடந்த ஆண்டு சமஸ்டிபூரில் நடந்த செட்னா சபா நிகழ்ச்சியில் பேசியபோது, 2017ம் ஆண்டு தொடக்கத்தில்  மாணவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில்,  மாநிலத்தின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் என கூறி யிருந்தார்.

இந்நிலையில், பீகார் தினமான (மார்ச் 22) நேற்று, பாட்னாவில் நடைபெற்ற பீகார் தின நிகழ்ச்சியில் இலவச வைபை வசதியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது ,இந்த இலவச வைபை வசதி கல்வி சம்பந்தமான ஆய்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ளுமாறும், வேறு மற்ற பயன்களுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த வைபை வசதி மாநிலத்தில் உள்ள 16 பல்கலைக்கழகங்கள், 273 கல்லூரிகள், 30 கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நிதிஷ்குமார் அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது அனைத்து கல்லூரி, பல்கலைக்கழ கங்களுக்கான இலவச வைஃபை வசதி அறிவிப்பு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, 1912ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் இருந்து பீகார் தனியாக பிரிக்கப்பட்டது. அந்த நாளை பீகார் தினம் என்று கொண்டாடி வருகிறார்கள் அம்மாநில மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.