முசாபர்நகர்

மூளைக்காயச்சலால் பீகார் மாநிலத்தில் உயர் இழந்தோர் எணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவம்னைஒரு அரசு மருத்துவமனையாகும். இந்த பகுதியில் உள்ள பல குழந்தைகள் திடீரென உடல்நலம் குன்றியதால் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நோய் குறையாததால் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பல குழந்திகள் மரணம் அடைந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் கயா மாவட்டத்திலும் பரவி உள்ளது எனவே இங்குள்ள குழந்தைகள் படிக்கும் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை 22 ஆம் தேதி வரை மூட பிகார் அரசு உத்தரவிட்டுள்ளது. மேல் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் காலை 10.30 மணி வரை மட்டுமே இயங்க உள்ளது.

இந்த மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 84 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.  . அத்துடன் 130 குழந்தைகள் மூளை காய்ச்சலால் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரணம் அடைந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் ரத்தத்தில் குளூகோஸ் குறைவாக இருந்ததை ஒட்டி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு இரத்தத்தில் குளூகோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.