பிக்பாஸ் சீசன் 1-ன் டைட்டில் வின்னர் ஆரவின் “மார்க்கெட் ராஜா” டீஸர் வெளியாகியுள்ளது.

Must read

நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள மார்க்கெட் ராஜா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வின்னர் மூலம் புகழ் பெற்ற ஆரவ், முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் “ராஜ பீமா” இந்தப் படம் ரிலீஸ் ஆகாத நிலையில், தற்போது இவர் காதல் மன்னன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் காவ்யா தாப்பர், நிகேஷா படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மே 1-ம் தேதி படக்குழு வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

நான் டாக்டர் அல்ல டான் என்று அணல் பறக்க வசனம் பேசும் ஆரவ், பிக்பாஸ்-ல் கொடுத்த மருத்துவ முத்தம் போன்று இதிலும் கொடுத்துள்ளார்.

 

 

More articles

Latest article