பிக் பாஸ் 5 : எவனையும் ஏமாற்றி சம்பாதிக்கல என அபிஷேக் ராஜா ஆவேசம்…..!

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே திடீரென வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. 2-வது வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தேர்வுக்கான போட்டி மற்றும் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தாமரைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார். நாமினேஷன் ப்ராசஸ்-ல் தாமரைச்செல்வி மற்றும் பாவனியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ் மேட்களும் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள்.

முதல் ப்ரோமோ : தாமரைச்செல்வி பிரிந்த தன் மகனைப் பற்றி மிகவும் உருக்கமாக பேச மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்கலங்கும் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.

2-வது ப்ரோமோ : அபிஷேக் ராஜா தனது கடந்து வந்த பாதையை பற்றி பகிர்ந்து கொள்கிறார். “எவனையும் ஏமாற்றி சம்பாதிக்கல” என அபிஷேக் ராஜா ஆவேசமாக பேச, மறுபுறம் ராஜுவும் இமான் அண்ணாச்சியும் அதுகுறித்து விமர்சிக்கிறார்கள்.

3-வது ப்ரோமோ : வருத்தத்தில் இருக்கும் தாமரைச்செல்வியை பாவனியும் ஐக்கி பெர்ரியும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க அபிஷேக் ராஜா, தாமரைச்செல்வியின் பேச்சு குறித்து நெகிழ்ச்சியோடு புகழ்ந்து பேசுகிறார் .

 

More articles

Latest article