தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டிற்குள் சுவாரஸ்யமும், ஈடுபாடும் குறைவாக உள்ள நபர்களை போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டி வர, ஷிவானியும் ஜித்தன் ரமேஷுன் நாமினேட் செய்யப்படுகிறார்கள். இதை தொடர்ந்து அவர்கள் ஒரு கண்ணாடி அறையில் அடைத்து வைக்கப்படுகிறார்.


அடுத்த ப்ரோமோவில் போட்டியாளர் மூவருக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்கள் வர வேண்டிய சூழலில், கேப்ரியல்லாவுக்கு சுரேஷ் மட்டுமே ஆதரவாக நிற்கிறார். மேலும் தனது வலியை தாங்கியபடி, அவர் கேப்ரியால்லாவை தாங்கி கொண்டு நிற்பதை ஏற்கமுடியாமல், கீழே இறங்கி, கேப்ரியல்லா அவரை கட்டி அணைத்து அழுவது போலவும் இந்த புரொமோ வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே பலரும் சந்தேகப் பார்வையுடன் பார்த்த ஒருவர் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி ஆனால் இன்று லட்சக்கணக்கான இதயங்களை கவர்ந்துள்ளார்.


பொதுவாகவே பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில வாரங்களிலேயே ஒரு காதல் மலர்வது வழக்கம். தற்போது வெளியாகி இருக்கும் புதியபுரோமோ ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே காதல் மலர்வது போன்ற காட்சிகள் .