“பிக்பாஸ்” பிந்து, கதறி அழுதது கட் செய்யப்பட்டதா?

Must read

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” தொடரில், கலந்து கொண்டுள்ள நடிகை பிந்து மாதவி, கதறி, கதறி அழுததாகவும், அந்த காட்சி கட் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

திரைப்பட தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவரது திருமணம் வரும்  அக்டோபர் மாதம் திருமணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தினகரன் நாளேட்டின் நிறுவனர் கே.பி. கந்தசாமியின் பேத்தி கனிகா குமரன்தான் மணமகள்.

இந்த வருண்மணியன் பிரபல கட்டிட நிறுவன அதிபர். இவருக்கு நடிகை த்ரிஷாவுடன் அறிமுகம் ஏற்பட.. சில திரைப்படங்களும் எடுத்தார். இதற்கிடையே த்ரிஷாவுடன் காதல் மலர.. நிச்சயதார்த்தம் வரை சென்றது. பிறகு ஏதோ பிரச்சினையால் திருமணம் தடைபட்டது.

பிறகு, நடிகை பிந்துமாதவியுடன் கிசுகிசுக்கப்பட்டார் வருண்.

இந்த நிலையில், வருண் மணியனும் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பிந்துவே ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

இதையடுத்து இருவரும் காதலிக்கி றார்கள் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

அந்த விசயம் அப்படியே அமுங்கிப்போனது.

இந்த நிலையில்தான் கனிதா குமரனை வருண் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியானது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பிந்துமாதவி, இந்த தகவலை அறிந்து கதறி அழுததாகவும், அவரை அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பிறர் ஆறுதல் படுத்தியதாகவும், இந்த காட்சிகளை ஒளிபரப்பவில்லை என்றும் தகவல் பரவிவருகிறது.

ஆனால் இதை அருண் தரப்பினர் மறுக்கிறார்கள். “பிந்துமாதவி பேஸ்புக்கில் அந்த படத்தை வெளியிட்ட உடனேயே வருண் மணியன் விளக்கம் அளித்தார்.

அதாவது, “நண்பர்களுடன்  மாலத்தீவுகளுக்கு சென்றேன். பிந்து மாதவியும் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ. மற்றபடி எங்களுக்குள் காதல் கிடையாது. நல்ல நண்பர்கள்” என்றார் வருண்.

தவிர பிக்பாஸ் வீட்டில் வெளியில் இருந்து எந்தத் தகவலும் செல்வதில்லை என்கிறார்கள்.

பிறகு எப்படி பிந்துவுக்கு தகவல் தெரியும். இதெல்லாம் அந்த நிகழ்ச்சியை பிரபலப்பட்டுத்த  பரப்பப்படும் தகவல்கள்” என்கிறார்கள் அருண் தரப்பினர்.

 

More articles

Latest article