வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்வு பெற்றுள்ள பிடனின் மருத்துவக் குழுவில் இந்திய வம்சாவளி டாக்டர் விவேக் மூர்த்தி சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த குழுவில் இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவர் விவேக் மூர்த்தி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செலின் கவுண்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மருத்துவர் விவேக் மூர்த்தி, சர்ஜன் ஜெனரலாக பிடன் மருத்துவக் குழுவில் இடம்பெறுகிறார். விவேக் மூர்த்தி எபோலா மற்றும் ஸிகா வைரஸ்கள் மற்றும் அமெரிக்கர்களின் உடல், மன அழுத்தம், தனிமையின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல சுகாதார பிரச்னைகளுக்கு தீர்வு தந்துள்ளார்.

டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குநராகவும், கொரோனா செயல்பாட்டின் தலைவராக டாக்டர் மார்செல்லா நுனேஸ் ஸ்மித் ஆகியோரும் பிடன் குழுவில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.